search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "ஆலியா பட்"

    • நடிகை அலியாபட் சமீபத்தில் வீட்டுக்குள் அறையில் இருந்ததை எதிர்வீட்டு மாடியில் நின்று இருவர் கேமரா மூலம் ரகசியமாக படம்பிடித்தது பரபரப்பை ஏற்படுத்தியது.
    • தமிழில் அடங்க மறு, இமைக்கா நொடிகள், சங்கத்தமிழன், துக்ளக் தர்பார், அரண்மனை-3 உள்ளிட்ட படங்களில் நடித்துள்ள நடிகை ராஷிகன்னா இது குறித்து சாடி உள்ளார்.

    இந்தி நடிகை ஆலியாபட் சமீபத்தில் வீட்டுக்குள் ஒரு அறையில் இருந்ததை எதிர்வீட்டு மாடியில் நின்று இருவர் கேமரா மூலம் ரகசியமாக படம்பிடித்தது பரபரப்பை ஏற்படுத்தியது. அவர்கள் மீது அலியாபட் போலீசில் புகார் அளித்துள்ளார். இந்த சம்பவம் நடிகர்-நடிகைகளுக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. பலரும் இதனை கண்டித்து வருகிறார்கள்.




    தமிழில் அடங்க மறு, இமைக்கா நொடிகள், சங்கத்தமிழன், துக்ளக் தர்பார், அரண்மனை-3 உள்ளிட்ட படங்களில் நடித்துள்ள நடிகை ராஷி கண்ணாவும் சாடி உள்ளார். இதுகுறித்து ராஷி கண்ணா கூறும்போது, "ஒவ்வொரு மனிதருக்கும் சொந்த வாழ்க்கை உள்ளது. சில விஷயங்களை பகிரங்கப்படுத்த விரும்பமாட்டார்கள். அதை அனைவரும் கவுரவப்படுத்த வேண்டும். பிரபலங்களை பார்க்கும்போது அவர்களுடன் புகைப்படங்கள் எடுத்துக் கொள்ளலாம். 




    ஆலியாபட் போன்ற நடிகைகளை பார்த்தால் நிச்சயம் படங்கள் எடுத்துக்கொள்ள தோன்றும். அதை யாரும் எதிர்க்க மாட்டார்கள். ஆனால் அதற்கும் ஒரு எல்லை இருக்கிறது. அந்த எல்லை மீறி நடந்து கொள்ளக்கூடாது. எல்லை மீறினால் அது தாக்குதலுக்கு சமம் என்பது என் கருத்து. இப்படி நடந்தது அலியா பட்டுக்கா மற்றவருக்கா என்று நான் சொல்லவில்லை. இந்த விஷயத்தில் யாராக இருந்தாலும் ஒன்றுதான். இதுபோன்ற சம்பவங்கள் மீண்டும் நடைபெறாமல் இருப்பதற்கு புதிய சட்டங்களை கொண்டுவர வேண்டிய அவசியம் இருக்கிறது'' என்றார்.

    அயன் முகர்ஜி இயக்கத்தில் ஆலியா பட் நடிப்பில் உருவாகி இருக்கும் பிரம்மாஸ்திரா படத்தின் ரிலீஸ் தேதியை மாற்றம் செய்து அறிக்கை வெளியிடப்பட்டுள்ளது. #Brahmastra
    பிரபல பாலிவுட் நடிகை ஆலியா பட் நடிப்பில் தற்போது உருவாகி இருக்கும் படம் ‘பிரம்மாஸ்திரா’. இப்படத்தை அயன் முகர்ஜி இயக்கியுள்ளார். இப்படம் இந்த ஆண்டும் கிறிஸ்துமஸ் விடுமுறையில் வெளியாகும் என்று அறிவிப்பு வெளியானது. ஆனால், தற்போது அடுத்த ஆண்டு வெளியிட இருப்பதாக இயக்குனர் அறிவித்திருக்கிறார்.

    இதுகுறித்து அவர் அளித்துள்ள அறிக்கையில், ‘இந்தியாவின் முதல் முத்தொகுப்பு திரைப்படமான ‘பிரம்மாஸ்திரா’-வின் சமீபத்திய முக்கியமான பகிர்வு இது.

    இப்படத்தின் கனவானது என்னுள் 2011 இல் உருவானது. 2013-ல் ‘ஏ ஜாவானி ஹய் திவானி’ (Yeh Jawaani Hai Deewani) படம் முடித்தவுடன் இப்படத்திற்கான கதை, திரைக்கதையை உருவாக்கத் தொடங்கினேன்.

    கதை, திரைக்கதையாக்கம், கதாப்பாத்திரப்படைப்பு, இசை மட்டுமல்லாமல் விஎப்எக்ஸ் (vfx) துறையிலும் நம்மை அடுத்த கட்டத்திற்கு கொண்டு செல்லப் போகும் ஒரு பிரமிப்பான-பிரமாண்டமான இமாலய முயற்சி இது.



    இப்படத்தின் லோகோவை 2019 கும்பமேளாவில் பிரம்மாண்டமாக ஆகாயத்தில் வெளியிட்டோம்; அப்போது கூட இப்படத்தை 2019 கிறிஸ்துமஸ் அன்று வெளியிட முடியுமென உற்சாகமாக இருந்தோம்.

    ஆனால் கடந்த ஒரு வார காலமாக எங்கள் படத்தின் vfx தொழில்நுட்பக் குழுவினர் இப்படத்தை நினைத்த அளவுக்கு பிரம்மாண்டமாக கொண்டு வர சற்று அதிக காலம் தேவை என கருத ஆரம்பித்தனர்.

    இதை மனதில் கொண்டு 'பிரம்மாஸ்திரா' திரை வெளியீட்டை 2019 கிறிஸ்துமஸ் தினத்தில் இருந்து 2020 கோடை விடுமுறை காலத்திற்கு தள்ளிவைக்க முடிவெடுத்திருக்கின்றோம்.

    இவ்வாறு அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.
    64-வது பிலிம்பேர் விருது விழாவில் ரன்பீர் கபூர், ஆலியா பட்டுக்கு சிறந்த நடிகர், நடிகைகான விருது வழங்கப்பட்டுள்ளது. #FilmfareAwards #FilmFare
    64-வது பிலிம்பேர் விருது வழங்கும் விழா நேற்று மும்பையில் கோலா கலமாக நடந்தது. இந்தி சினிமா படங்களுக்கு வழங்கப்பட்ட இந்த விருது நிகழ்ச்சியில் இந்தி முன்னணி நடிகர்-நடிகர்கள், தொழில்நுட்ப கலைஞர் உள்ளிட்ட ஏராளமானோர் பங்கேற்றனர்.

    சிறந்த நடிகராக ரன்பீர் கபூர் தேர்வு செய்யப்பட்டார். அவர் ‘சஞ்சு’ படத்தில் நடித்ததற்காக இந்த விருதை வென்றார். அந்த படம் நடிகர் சஞ்சய் தத்தின் வாழ்க்கையில் நடந்த சம்பவங்களை மையமாக கொண்டு எடுக்கப்பட்டது. இதில் சஞ்சய்தத் வேடத்தில் ரன்பீர் கபூர் நடித்து இருந்தார்.

    சிறந்த நடிகை விருதை ‘ராஷி’ படத்தில் முன்னணி கதாபாத்திரத்தில் நடித்த ஆலியாபட் வென்றார். இந்த படத்தில் அவர் பெண் உளவாளி வேடத்தில் நடித்து இருந்தார். சிறந்த படமாக ‘ராஷி’யும், அப்படத்தை இயக்கிய மேக்னா குல்சார் சிறந்த இயக்குனராகவும் தேர்வு செய்யப்பட்டனர்.



    வாழ்நாள் சாதனையாளர் விருது மறைந்த நடிகை ஸ்ரீதேவிக்கு வழங்கப்பட்டது. அதை அவரது மகள்கள் பெற்றுக் கொண்டனர். சினிமாவில் 50 ஆண்டு காலம் சேவையாற்றியதற்காக நடிகை ஹேமமாலினிக்கு விருது கொடுக்கப்பட்டது.

    ‘பத்மாவத்’ படத்தில் நடித்த ரன்வீர்சிங்குக்கு சிறந்த விமர்சிக்கப்பட்ட நடிகர் விருது வழங்கப்பட்டது. இதே போல பல்வேறு பிரிவுகளில் விருதுகள் வழங்கப்பட்டது. நிகழ்ச்சிகளில் நடிகர்- நடிகைகளின் கண்கவர் கலைநிகழ்ச்சிகள் நடந்தன.

    ×